முகப்பு /செய்தி /இந்தியா / கேரளா திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.. பல்லாயிரக்காண பக்தர்கள் குவிந்தனர்..

கேரளா திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.. பல்லாயிரக்காண பக்தர்கள் குவிந்தனர்..

கேரளா திருச்சூர் பூரம் திருவிழா

கேரளா திருச்சூர் பூரம் திருவிழா

Kerala Thrissur Pooram Festival 2023 : கேரளா திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. திருச்சூர் வடக்குநாதன் கோவிலின் முன் பகுதயில், ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் துவங்கி சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் நாளைய தினம் காலையில் பூரம் நிகழ்ச்சி முடிவடைகிறது.

நகரத்தின் மையத்திலுள்ள வடக்குநாதன் கோவில் முன் கொண்டாடப்படுகிறது. 2 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து துவங்கி திருவம்பாடி பகவதி அம்மன் கோவிலில் முடிகிறது.

இதையும் படிங்க : திடீரென சரிந்து விழுந்து உடைந்த தேர்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..

சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட யானைகள், மேளங்களின் மாயாஜால வித்தைகளான பஞ்ச வாத்தியம் , தொடர்ந்து ஒலிக்கும் பஞ்சவாத்தியம் மற்றும் நிகழ்ச்சியின் முடிவில் 6 - மணி நேரத்திற்கு மேலாக வெடிக்கும் வான வேடிக்கை என கேரளாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான திருவிழாவின் சிகர நிகழ்வான பூரங்களின் பூரம் என அழைக்கப்படும் திரிசூர் பூரம் இன்று நடைபெறுகிறது.

top videos

    மாலை குட மாற்றம் தொடர்ந்து பிரமாண்ட வான வேடிக்கை நடைபெறும். சுமார் 20 லட்சம் மக்கள் விழாவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    First published:

    Tags: India, Kerala