முகப்பு /செய்தி /இந்தியா / 15 வயதில் போதைக்கு அடிமை... பெண் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சிறுவன்... கேரளாவில் மீண்டும் பரபரப்பு..!

15 வயதில் போதைக்கு அடிமை... பெண் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சிறுவன்... கேரளாவில் மீண்டும் பரபரப்பு..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெண் நீதிபதியை போதைக்கு அடிமையான 15 வயது சிறுவன் கத்தியால் குத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் மருத்துவமனை ஒன்றில்  கைதி ஒருவரால் பெண் மருத்துவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு பகீர் சம்பவம் ஒன்று நீதிமன்றத்தில் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளான். தினம்தோறும் வீட்டிலேயே போதை வஸ்துக்களை பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது, தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளான். தாய் தட்டி கேட்டதற்கு வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளான்.

ஒரு கட்டத்தில் விரக்தியான தாயார் தனது மகன் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினார். அன்றைய தினம் இரவு 10 மணி ஆகிவிட்டதால் சிறுவனை அந்த பெண் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு கொண்டு சென்று போலீசார் ஆஜர்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வீட்டில் வழக்கு குறித்து பெண் நீதிபதி விசாரித்த போது, திடீரென சிறுவன் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதியை நோக்கி குத்த பாய்ந்தார். இதைக் கண்டு பெண் நீதிபதி மற்றும் சிறுவனின் தாயார் பதறிப்போய் அலறினர். அதற்குள்ளாக போலீசார் பாய்ந்து சிறுவனை மடக்கி பிடித்து சிறுவனை கட்டுக்குள் கொண்டு வந்து வெளியே இழுத்து சென்றனர்.

இதையும் படிங்க:  4 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்திலேயே பாலியல் சீண்டல்.. ஊழியர் கைது!

top videos

    இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண் நீதிபதி மாவட்ட நீதிபதியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் வைத்து இளம் பெண் மருத்துவரை கைது குத்தி கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து கேரளா மீள்வதற்குள்ளாகவே, பெண் நீதிபதியை சிறுவன் கத்தியால் குத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Crime News, Kerala