முகப்பு /செய்தி /இந்தியா / சம்பளம் கேட்ட புலம்பெயர் தொழிலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்... கேரளாவில் வெறிச்செயல்!

சம்பளம் கேட்ட புலம்பெயர் தொழிலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்... கேரளாவில் வெறிச்செயல்!

வடமாநில தொழிலாளியை தாக்கிய நிறுவன மேலாளர்

வடமாநில தொழிலாளியை தாக்கிய நிறுவன மேலாளர்

Kerala attack | 4 மாத சம்பளம் வழங்கவில்லை என புகார் அளித்ததால் ஆத்திரத்தில் நிறுவன மேலாளர் வடமாநில தொழிலாளியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் நான்கு மாத சம்பளம் வழங்காமல் இருப்பது குறித்து புகார் அளித்த வெளிமாநில தொழிலாளரை கம்பெனியின் மேலாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனம் இந்த சாலை பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்த நிலையில் இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளிமாநில தொழிலாளர் ஒருவர் ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை நிலையத்திற்கு புகார் அனுப்பி இருந்தார்.

இந்தப் புகார் குறித்து தகவல் அறிந்த பையனூரில் செயல்பட்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி புகார் கூறிய வெளிமாநில தொழிலாளியை காலால் எட்டி மிதித்தும் கன்னத்தில் அறைந்தும், கட்டையினால் கொடுமையாக தாக்கியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர், மேலாளரின் காலை பிடித்து கெஞ்சியும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

top videos

    இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்ற போதிலும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    First published:

    Tags: Attack, Crime News, Kerala