கேரளாவில் பச்சிளங் குழந்தையை வாளிக்குள் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் , ஆறன்முள பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கன்னூர் தனியார் மருத்துவமனையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் தனக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டதால் கழிவறையில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குழந்தை வாளிக்குள் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒருவர் தொடுவதை உணர்ந்த குழந்தை அழுக தொடங்கியது. குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக வாளியோடு சேர்த்து குழந்தையை தூக்கி சென்று ஓடோடி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மேலும், குழந்தையை பாதுகாக்க குழந்தைகள் நலத்துறைக்கு அரசு உத்தரவிட்டது.
விசாரணையில் முறையற்ற உறவின் மூலம் குழந்தை பிறந்ததால் வீட்டிலேயே பிரசவித்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை போட்டு வந்த பெண் மற்றும் அவரின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாளிக்குள் உயிருடன் இருந்த பிஞ்சு குழந்தையை விரைந்து சென்று காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.