கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தனது வீட்டிலுள்ள ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அவர் இடுக்கி நபர் பகுதிகளில் இருக்கும் சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில், அங்குள்ள டிராபிக் சிக்னலில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றது பதிவாகியுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் சென்றது மோட்டார் வாகன சட்டத்தின் படி விதிமீறல் என்ற நிலையில், சிசிடிவி புகைப்படங்களை போக்குவரத்துத் துறை வீட்டிற்கு அனுப்பி அபராதத்துடன் கட்டுமாறு கூறியுள்ளது. இங்கு தான் அந்த நபரின் வாழ்க்கையில் விதி விளையாடியுள்ளது. அந்த ஸ்கூட்டியின் ஆர்சி உரிமம் அந்த நபரின் மனைவியின் பேரில் உள்ளது.
எனவே, அந்த புகைப்படம் மற்றும் அபராதம் வீட்டில் உள்ள மனைவியின் செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், அந்த ஸ்கூட்டியில் கணவர் தனியாக செல்லவில்லை. வேறு ஒரு பெண்ணுடன் வெளியே சுற்றியுள்ளார்.
ஷாக் ஆன மனைவி தனது கணவரிடம் புகைப்படத்தை காட்டி யார் அந்த பெண் எனக் கேட்டுள்ளார். அதற்கு கணவர், பெண்ணுக்கு லிப்ட் தான் கொடுத்தேன் யார் எனத் தெரியாது எனக் கூறி சமாளித்துள்ளார். ஆனால், மனைவிக்கு அந்த பதில் திருப்திகரமாக இல்லை. கணவரை தொடர்ந்து விசாரிக்கவே, இருவருக்கும் வாக்குவாதமானது முற்றியுள்ளது. இதில், தன்னையும் தனது 3 வயது குழந்தையையும் கணவர் தாக்கியதாகக் கூறி மனைவி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: மருத்துவர் வந்தனா உடலில் 23 காயங்கள்... மரணத்திற்கு காரணம் இதுதான்... பிரேத பரிசோதனை அறிக்கை..!
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தொடர்ந்து நீதிமன்ற காவலில் அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்று சிசிடிவி கேமராவில் மட்டும் இல்லாமல் தனது மனைவியிடமும் சேர்ந்து மாட்டிக்கொண்ட கணவர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV, Husband Wife, Kerala, Traffic Rules