முகப்பு /செய்தி /இந்தியா / மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்... கேட்ட வரதட்சணையை தராததால் ஆத்திரம்...!

மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்... கேட்ட வரதட்சணையை தராததால் ஆத்திரம்...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆபாச செயலிகளில் பதிவேற்றம் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Kerala, India

கேட்ட வரதட்சணை தராத ஆத்திரத்தில், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்த கணவரை காவல்துறை கைது செய்துள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமபெட்டி பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான செபி. இவருக்கும் பலாக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார், 80 கிராம் தங்க நகையை வரதட்சணையாக தந்துள்ளார்.

இந்நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே வரதட்சணை போதவில்லை என்று கணவர் மனைவியை தொடர்ச்சியாக வற்புறுத்தி கொடுமை செய்து வந்துள்ளார். பெண் வீட்டார் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பத்தார். எனவே, அவர்களால் கூடுதல் வரதட்சணை தர முடியவில்லை. கணவரின் கொடுமைகளை பெண் சுமார் 2.5 ஆண்டுகள் பொறுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இப்படி இருக்க ஒரு விபரீத செயலில் கணவர் செபி ஈடுபட்டுள்ளார். தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆபாச செயலிகளில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த மனைவி தனது பிறந்த வீட்டாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தை கேட்டு நச்சரித்த கள்ளக்காதலி... லாட்ஜுக்கு அழைத்து கழுத்தறுத்து கொன்ற கள்ளக்காதலன்... கேரளாவில் பயங்கரம்..!

top videos

    தொடர்ந்து அந்த பெண் தனது பெற்றோர் துணையுடன் அருகே உள்ள கும்மங்குளம் காவல்நிலையத்தில் புகார் தரவே, கணவர் செபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். செபியின் செல்போனை கைப்பற்றி அதை சோதனை செய்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கை விரைந்து முடித்து உரிய தண்டனை பெற்று தருவோம் என பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உறுதி அளித்துள்ளது.

    First published:

    Tags: Crime News, Dowry Cases, Husband Wife, Kerala