முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து- 16 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து- 16 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்

கேரளா படகு விபத்து

கேரளா படகு விபத்து

கேரளாவில் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணித்த சுற்றுலா படகு, மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அந்த படகில் 40 பேர் வரையில் பயணித்ததாக கூறப்படும் நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேர் குழந்தைகள் ஆகும். அதேநேரம், உயிரிழந்தவர்கள் யார் என்பது தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய வெளிச்சமின்மை காரணமாக மீதமுள்ளோரை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

25 பேர் வரையில் மட்டுமே ஏற்ற வேண்டிய படகில் 40 பேர் வரை ஏற்றியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

top videos

    இந்த விபத்து குறித்த பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘கேரளா மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த பொதுமக்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து அறிந்து துயரமுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Kerala