முகப்பு /செய்தி /இந்தியா / தேவிக்குளம் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தேவிக்குளம் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தேவிக்குளம் எம்எல்ஏ ராஜா

தேவிக்குளம் எம்எல்ஏ ராஜா

கேரளாவில் ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏகளுடன் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், தேவிக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜா. இந்த தொகுதி பட்டியலின மக்களுக்காக ரிசர்வ் செய்த தொகுதியாகும். இவர் வெற்றிக்கு எதிராக இவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி வேட்பாளர் டி குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் போலியாக சாதி சான்றிதழ் வழங்கி ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மலையில் மோதி நொறுங்கிய பயிற்சி விமானம்... விமானியாக ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

top videos

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்எல்ஏ ராஜாவின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. இவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் எனக் கூறி, வழங்கிய சாதி சான்றிதழ் செல்லாது என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

    First published:

    Tags: Kerala, Kerala high court, Mla disqualification