விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியானது. இந்தப் படத்தில் கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்து பெண்களை மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றி ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாகவும் கேரளாவை சேர்ந்த பெண்கள் பலர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த படத்திற்கு எதிராக கண்டனம் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும் நிலையில், படத்தை தடை செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நகரேஷ் மற்றும் சோபி தாமஸ் தலைமையிலான அமர்வு படத்தை திரையிட தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் தனது தீர்ப்பில் கூறியதாவது, 'ஒரு படத்தை திரையிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது. படத்தின் டீசர் கடந்த நவம்பரில் வெளியானது.
இதையும் படிங்க: பஜ்ரங்தள் தடை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்துமா..? கர்நாடகா காங்கிரஸ் விளக்கம்
உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டதாகத் தான் திரைப்படம் கூறுகிறது. படத்தில் எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் ஆட்சபத்திற்குரிய கருத்துக்கள் ஏதும் இல்லை. படத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எந்தவொரு கருத்தும் இல்லை. ஐஎஸ்ஐஸ் அமைப்புக்கு எதிராகத் தான் கருத்துக்கள் உள்ளன. கேரள சமூகம் மதச்சார்பற்ற தன்னை கொண்டது. ஏற்கனவே, இந்து சாமியார்கள், கிறிஸ்துவ பாதிரியார்களை விமர்சித்து படங்கள் பல வந்துள்ளன. அதையெல்லாம் கதைகளாக பார்க்கும் போது இதில் என்ன பிரச்னை” எனக் கூறி தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ban, Kerala, Kerala high court