கேரளா: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோருக்கு மாஸ்க் அணிவதை கேரள அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 1 அன்று கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,953ஆக அதிகரித்துள்ளது. கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் அலுவலகத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தில் உள்ள எந்த மருத்துவமனையும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையை மறுக்கக் கூடாது, அவர்களுக்காக தனி படுக்கைகள் தயார் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய், இதயம் அல்லது சிறுநீரக நோய், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன. கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் இதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளுக்கு நோயாளிகளுடன் வருபவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்ஸா அல்லது கொரோனாவின் பிற அறிகுறிகளைக் காட்டினால் ஆர்டி பிசிஆர் சோதனைகளை எடுக்க வேண்டும், ASHA பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கர்ப்பிணிகளிடம் நோயின் அறிகுறிகளை பரிசோதித்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தடுப்பூசி மற்றும் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணர்வின் அவசியமும் வழிகாட்டுதல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளி அதைப்பெற முடியும் என்றும், தொற்றுநோய்க்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டால், அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதை அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்றுவதை மாவட்ட மருத்துவ அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona safety, Kerala, Mask