முகப்பு /செய்தி /இந்தியா / முல்லைப் பெரியார் அணைப் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச நிபுணர் குழு - கேரளா அரசு வலியுறுத்தல்

முல்லைப் பெரியார் அணைப் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச நிபுணர் குழு - கேரளா அரசு வலியுறுத்தல்

முல்லைப் பெரியார் அணை

முல்லைப் பெரியார் அணை

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து சர்வதேச நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க உத்தரவிடக் கோரி, இடுக்கியைச் சேர்ந்த ஜோ ஜோஸப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த கேரள அரசு, 2020-ம் ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 138 முறை சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றம் நிகழ்ந்தால் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நீரியல், கட்டுமானம், புவியியல், நிலநடுக்கம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வில் இரு மாநில பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Also Read : வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அணைப் பாதுகாப்பை உறுதி செய்ய, சர்வதேச நிபுணர்கள் குழு அமைத்து, ஓராண்டுக்குள் சுதந்திரமான ஆய்வை முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Kerala government, Mullai Periyar Dam