முகப்பு /செய்தி /இந்தியா / குழந்தை கேட்டு நச்சரித்த கள்ளக்காதலி... லாட்ஜுக்கு அழைத்து கழுத்தறுத்து கொன்ற கள்ளக்காதலன்... கேரளாவில் பயங்கரம்..!

குழந்தை கேட்டு நச்சரித்த கள்ளக்காதலி... லாட்ஜுக்கு அழைத்து கழுத்தறுத்து கொன்ற கள்ளக்காதலன்... கேரளாவில் பயங்கரம்..!

தேவிகா

தேவிகா

Extra Marital Affair | கள்ளக்காதலியை தனியார் விடுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொன்றதாக கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில்  கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா என்னும் பகுதியை சார்ந்தவர் தேவிகா (34). அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணம் ஆகி கணவனும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதுபோல காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானம் என்னும் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் 2 மணி அளவில் கள்ளக் காதலியான தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலன் சதீஷ் ஆவூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.

இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக  தகாத உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையே  சதீஷின் குழந்தையை பார்த்து பிடித்துப் போனதால், தேவிகா சதீஷிடம் அவரது மகளை தனக்கு தந்துவிட கேட்டு  தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் இருவரும் தனியார் விடுதியில் சந்தித்துக் கொண்ட நிலையில், குழந்த வேண்டும் என மீண்டும் அடம்பிடிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சதீஷ்  பொறுமை இழந்து அறையில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க; ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது... தாம்பரத்தில் பரபரப்பு..!

top videos

    என்னை வாழ விடவில்லை, எனது குழந்தையை கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். அதை தாங்க முடியாமல் தான் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து தனியார் விடுதியில் சென்று ஆய்வு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காதலன் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News, Illegal affair, Kerala, Murder