கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் என்பவர் சிகிச்சைக்காக கொட்டாரகரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனாவை, சந்தீப் கத்தரிக்கோலால் கொடூரமாக குத்தினார். கை, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்தப்பட்டதால் படுகாயமடைந்த வந்தனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்லம் அஜிசியா கல்லூரியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த வந்தனா உடல், இரவு கோட்டயத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை மதியம் இரண்டு மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையின்படி, கத்தியால் குத்தப்பட்டு இறந்த டாக்டர் வந்தனா உடலில் 11 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, முதுகில் 6 முறையும், தலையில் 3 முறையும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். உடல் முழுவதும் 23 காயங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதுகு மற்றும் தலையில் குத்தப்பட்ட காயங்களால் தான் மருத்துவர் வந்தனா இறந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரத்தில் மருத்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : பிரதமர் மோடிக்கு விருந்தளிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...!
திருவனந்தபுரம் மருத்துவமனையில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மருத்துவர் வந்தனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Doctor, Doctors Strike, Kerala, Murder case, Tamil News