கேரள மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலாப் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தன்னூர் பகுதியில் தோவல்தீர்த்தம் கடற்கரை உள்ளது. இதன் அருகே நேற்று மாலை நேரத்தில் அட்லான்டிக் என்ற டபுள் டக்கர் சுற்றுலா படகு 30க்கும் மேற்பட்ட சுற்றலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த படகு மாலை 7 மணி அளவில் நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தரப்பட்டதன் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடலை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டெடுத்தனர். தொடர்ந்து மாயமானவர்களை தேடி மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் விடி சதீஷன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் மின்வெட்டு.. அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை
படகு இயக்கத்தின் போது பல விதிமுறைகள் மீறப்பட்டதே விபத்திற்கான காரணமாக இருக்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றியமைத்து இதை இயக்கி வந்துள்ளனர். அத்துடன் அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றி சென்றதும் விபத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுவதில்லை, ஆனால் விபத்துக்குள்ளான படகு 7 மணி அளவில் இயக்கப்பட்டதும் விதிமுறை மீறலாகப் பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Boat capsized, Boat immersed, Kerala