முகப்பு /செய்தி /இந்தியா / News18 Rising India | தேசிய கல்விக் கொள்கையை எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை... மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

News18 Rising India | தேசிய கல்விக் கொள்கையை எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை... மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

News18 Rising India | இந்தியாவின் கல்வி உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

  • Last Updated :
  • Chennai, India

நெட்வொர்க்18-ன் ரைசிங் இந்தியா மாநாட்டில் பேசிய மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையில் சர்ச்சைகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையில் எந்த சர்ச்சையும் இல்லை, ஆனால் சுமார் ஐந்து மாநிலங்களுக்கு அதில் அரசியல் வேறுபாடுகள் உள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் வரலாறு திருத்தப்படும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகிய இருவரும் எனது நல்ல நண்பர்கள். இருவரிடமும் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசியுள்ளேன்; அக்கொள்கையை தற்போது எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. நாட்டில் உள்ள எந்த ஒரு மாநிலமும் தேசிய கல்விக் கொள்கை நடைமுறையை தற்போது கடிதம் மூலம் எதிர்க்கவில்லை.

அதோடு இந்தி மொழி பிரச்னையும் தொடர்ந்து வருகிறது; ஆனால், சுதந்திர இந்தியாவில் அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் என்று கூறிய முதல் பிரதமர் நரேந்திர மோடிதான் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். தமிழ், ஒடியா, குஜராத்தி, மராத்தி, உருது போன்ற அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.

’கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டில் மொழிகள் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளன. மாணவர்களின் வளர்ச்சிக்கு மொழி துணையாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் காசி-தமிழ் சங்கமத்தை இந்த காரணத்திற்காகதான் ஏற்பாடு செய்தோம். தமிழ் மக்களை இந்தி மொழியுடன் இணைக்க அவர்களிடையே நாகரீக இணைப்பை மேம்படுத்தினோம்’ என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

‘நான் மீண்டும் குறிப்பிடுகிறேன், தேசிய கல்விக் கொள்கையின் மூலம் வரலாறு திருத்தப்படும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. மாறாக, தேசிய கல்விக் கொள்கை மூலம் அறியப்படாத பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டங்கள் முன்னுக்கு கொண்டு வரப்படும்; 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தயாராக வைக்க வேண்டும் என்பதே இலக்கு’ என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

மேலும் பேசிய மத்திய அமைச்சர், கல்வி பரிணாம வளர்ச்சியுடன் முன்னேற வேண்டும். செயற்கை நுண்ணறிவான சாட்-ஜிபிடி பெற்றோர்களுக்கு சவால்களையும் அச்சத்தையும் கொண்டு வந்துள்ளது. ஆகவே, இந்தியாவின் கல்வி உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்று கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, Dharmendra Pradhan, NEWS18 RISING INDIA