முகப்பு /செய்தி /இந்தியா / மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி: பிரதமர் மோடி

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி: பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் தான் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2047ம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, ஒவ்வொருவரின் பங்களிப்பும் வேண்டும் என்பதே பாஜக அரசின் விருப்பம் என்று பிரதமர் மோடி கர்நாடகத்தில் பேசியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்திற்கு இந்தாண்டில் 7-வது முறையாக பிரதமர் மோடி சென்றார். சிக்கபல்லாபூரில் உள்ள மதுசூதன சாய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அந்த மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் தான் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தார்.  இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையும் வாசிக்க: எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் : 2024 தேர்தலில் களம் காண்பாரா ராகுல்?

மேலும், பேசிய அவர், ஏழை மக்களின் உடல்நலம் மற்றும் நடுத்தர மக்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறிய பிரதமர், அரசியல் சுயநலத்துக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் சிலர் மொழியை பயன்படுத்தி விளையாடி வருவதாகவும் சாடினார். தொடர்ந்து கடுகோடியில் இருந்து கிருஷ்ணராஜபுரா பகுதி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

First published:

Tags: Modi