முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் மஞ்சள் தர்பூசணியை விளைவித்து சாதனைப் படைக்கும் இளம் விவசாயி..!

கர்நாடகாவில் மஞ்சள் தர்பூசணியை விளைவித்து சாதனைப் படைக்கும் இளம் விவசாயி..!

மஞ்சள் தர்ப்பூசணி

மஞ்சள் தர்ப்பூசணி

பசவராஜ் பாட்டீல் என்ற இளம் விவசாயி, கர்நாடகாவின் கலாபுராகியில் உள்ள கோரல்லி கிராமத்த்தில் மஞ்சள் தர்பூசணியை பயிரிட்டு வருகிறார்.

  • Last Updated :
  • Karnataka, India

கோடைக்காலம் வந்தாலே.. குளிர்ச்சியான பானங்கள் மற்றும் பழங்களைத் தான் அதிகளவில் சாப்பிட அனைவரும் ஆசைப்படுவோம். அதிலும் தண்ணீர் பழம் என்று சொல்லக்கூடிய தர்பூசணி தான் வெயில் காலத்தில் பலரின் தாகத்தைத் தணிக்கிறது என்று சொல்லலாம். நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், கோடையில் இதைச் சாப்பிடும் போது உடலை உடனடியாக புத்துணச்சியுற செய்யும். மேலும் இதில் உள்ள அபரிமிதமான நீர்ச்சத்து உங்களை உடனடியாக செய்ய உதவுகிறது. இதனால் தான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. இதன் காரணமாகத் தான் கோடை வந்தாலே அனைத்துக் கடைகளிலும் பச்சை நிற தர்பூசணிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தான் வித்தியாசமாக மற்றும் சத்தான பழங்களைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கர்நாடகா விவசாயி மேற்கொண்டு வரும் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ அப்படி என்ன செய்துள்ளார்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

மஞ்சள் நிற தர்பூசணியை விளைவிக்கும் இளம் விவசாயி…

பசவராஜ் பாட்டீல் என்ற இளம் விவசாயி, கர்நாடகாவின் கலாபுராகியில் உள்ள கோரல்லி கிராமத்த்தில் மஞ்சள் தர்பூசணியை பயிரிட்டு வருகிறார். இந்த வகை தர்பூசணி பழங்கள் வெளியில் இருந்து பார்க்கையில் பச்சை நிறமாகவும், உள்ளே மஞ்சள் சதை பகுதியில் காட்சியளிக்கிறது. மஞ்சள் தர்பூசணிகளை அறிவியல் முறையில் பயிரிட்டு, உள்ளூர் சந்தை மற்றும் நகரத்தில் உள்ள பிக் பஜாருடன் இணைந்து பொருட்களை விற்பனை செய்து அவற்றிலும் லாபம் ஈட்டி வருகிறார். இதில் மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்துள்ளதாலும், வித்தியாசமாக இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்

இதுக்குறித்து, ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய பாட்டீல், மஞ்சள் நிற தர்பூசணிகள், பொதுவாக நாம் தற்போது உபயோகப்படுத்தும் சிவப்பு தர்பூசணிகளை விட அதிக இனிப்பில் இருப்பதாக கூறுகிறார். மேலும் நான் ரூ 2.லட்சம் முதலீடு செய்து ரூ. 3 லட்சத்துக்கு மேல் லாபம் ஈட்டினேன் என்றும் இந்தியாவில் நமது பயிர் உற்பத்தியைப் பல்வகைப்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார். பொதுவாக சிவப்பு-இளஞ்சிவப்பு வகை தர்பூசணி கோடை காலத்தில் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால் இந்த புதிய வகையான பழம் பலரையும் கவர்ந்து வருகிறது. இந்த பழங்கள் ஒரே மாதிரியான பச்சை நிற தோலுடனும் உள்ளே மஞ்சள் சதைப்பற்றுடன் இருக்கும் எனவும் தெரிவிக்கிறார்.

இந்த தர்பூசணிகள் முன்பு தமிழகத்தின் சில பகுதிகளிலும் பயிரிடப்பட்டது. மேலும், கோவாவில், இளம் விவசாயி ஒருவர் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் இந்த வகை தர்பூசணிகளை பயிரிட்டுள்ளார். மேலும் நித்தேஷ் போர்கர் வெறும் 4,000 ரூபாய் செலவழித்து 30,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Farmer, Watermelon