முகப்பு /செய்தி /இந்தியா / கரண்ட் பில் கட்ட முடியாது.. 22 வருஷமா பிடிவாதம் பிடிக்கும் கிராம மக்கள்.. எங்கு தெரியுமா..?

கரண்ட் பில் கட்ட முடியாது.. 22 வருஷமா பிடிவாதம் பிடிக்கும் கிராம மக்கள்.. எங்கு தெரியுமா..?

மின் கட்டணம்

மின் கட்டணம்

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் ஷிரோலா கிராமத்தில் பல ஆண்டுகளாக இலவச மின்சாரத் திட்டம் கடைப்பிடிக்கப்படுவதை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் இலவச மின்கட்டணத்தை அமல்படுத்துவது என்பது பரபரப்பாக பேசப்படும் ஹாட் டாபிக்காக இருக்கிறது. மின் நுகர்வு 200 யூனிட்டுகளுக்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில், ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கர்நாடக அரசு சமீபத்தில் அறிவித்தது.

ஆனால் கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஷிரோலா (Shirola) கிராமத்தில் பல ஆண்டுகளாக இலவச மின்சாரத் திட்டம் கடைப்பிடிக்கப்படுவதை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இது அரசு வழங்கும் திட்டத்தால் கிடையாது. ஷிரோலா கிராம வாசிகள் கிட்டத்தட்ட தொடர்ந்து 22 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர். 2001-ஆம் ஆண்டு முதல் இது தொடர்ந்து வருகிறது.

ஷிரோலா பகுதியானது கரும்பு தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. கடந்த 2001-ல் விவசாய பம்ப் செட்களை இயக்க போதுமான மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. 440 வாட் மின்சாரம் வழங்கப்படும் போது மட்டுமே வாட்டர் மோட்டார் சீராக இயக்கப்பட்டது. ஆனால் அப்போது அதிகாரிகள் பெரும்பாலும் 250 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே வழங்கினர். இதனால் Volt imbalance காரணமாக, விவசாய பண்ணைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பல மோட்டார்கள் எரிந்து சேதமடைந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து பெங்களூரு எலெக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனியிடம் (BESCOM) உதவி கேட்டனர். ஆனால் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை முதலில் செலுத்துமாறு விவசாயிகள் கேட்டு கொள்ளப்பட்டனர். ஏற்கனவே இருக்கும் EB பில்லை செட்டில் செய்தால் மட்டுமே அதிகாரிகள் மோட்டார் பம்புகளை சரிசெய்வார்கள் எனவும் கூறப்பட்டது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் விவசாய ஆர்வலர்களான நஞ்சுண்டசாமி மற்றும் ரமேஷ் கடானவர் ( Ramesh Gadannavar) தலைமையில் அணி திரண்டு போராட துவங்கினர்.

மேலும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த யாருடைய உதவியும் இன்றி, தாங்களே மோட்டார் பம்ப் செட்களை சரி செய்து விடுவது எனவும் விவசாயிகள் முடிவு செய்தனர். மேலும் தங்களுக்கு போதிய மின்சாரம் வழங்காத வரை மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்றும் ஷிரோலா கிராம மக்கள் கூறிவிட்டனர். போராட்டம் தீவிரமான நிலையில் பிற பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஷிரோலா கிராம விவசாயிகளுடன் சேர்ந்து அவர்களது மோட்டார்களை சரி செய்ய உதவினார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எந்த ஒரு Hescom ஊழியர்களும், அதிகாரிகளும் மின் கட்டணம் செலுத்த முடியாது என மறுத்த ஷிரோலா கிராமவாசிகளின் வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க துணியவில்லை என்பது தான். இந்த கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்க முடியாத நிலையில், விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு 10 ஹெச்பி வரை இலவச மின்சாரம் வழங்க அரசு முடிவு செய்தது. மேலும் நிலுவையில் உள்ள பில்களை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தது.

ஆனால் இந்த நிலுவை பில் தள்ளுபடி பம்ப்செட்டுகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது , வீட்டு இணைப்புகளுக்கு விலக்கு நீட்டிக்கப்படவில்லை. இதனால் ஷிரோலா கிராமவாசிகள் தங்கள் போராட்டத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றனர். Hescom அதிகாரிகள் கூறுகையில், ஷிரோல் கிராமத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ.1.38 கோடி மதிப்பிலான மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். நாங்கள் பில் கொடுக்க அல்லது இணைப்பை துண்டிக்க கிராமத்திற்குள் நுழைந்தால், கிராம மக்கள் Mudhol-ல் உள்ள எங்கள் அலுவலகத்தை முற்றுகையிடுகிறார்கள். இந்த சூழலில் எங்கள் பணியாளர்கள் ட்ரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற அல்லது சில பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே அங்கு செல்ல முடிகிறது என்கின்றனர்.

Also Read : நெல் உள்பட 14 வகை பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு: மத்திய அரசு

கடந்த 2006-ல் மற்றொரு கடும் போராட்டம் வெடித்தது. தங்களின் பயிர்களுக்கு அரசு உரிய விலையை வழங்கவில்லை, ஆனால் மின்சார கட்டணம் வசூலித்ததாக விவசாயிகள் கூறினர். இதனைத்தொடர்ந்தே வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் தாங்கள் செலுத்துவதில்லை என்கின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போராட்டத்தை தொடர்ந்து வரும் ஷிரோலா கிராமத்தினர் பின்வாங்குவதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.

First published:

Tags: Electricity bill, Karnataka