முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா... ஒரே மேடையில் குவிந்த அரசியல் தலைவர்கள்!

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா... ஒரே மேடையில் குவிந்த அரசியல் தலைவர்கள்!

சித்தராமையா

சித்தராமையா

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றார். அம்மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சித்தராமையாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் டிகே சிவகுமார், M.P.பாட்டீல், பரமேஸ்வரா, முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிஹோலி, ஜமீர் அகமது கான், ராமலிங்கா ரெட்டி, பிரியங் கார்கே ஆகியோர் அமைச்சரவையில் பதவிவேற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, சரத் பவார் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, கமல்ஹாசன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

2013-18 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர் சித்தராமையா. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமார் துணை முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகா பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பயன்படுத்த வேண்டும்.. நிதீஷ் குமார் கருத்து

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, CM Siddramaiah, DK Shivakumar, Karnataka Election 2023, Rahul Gandhi