முகப்பு /செய்தி /இந்தியா / 41 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகளில் வென்ற வேட்பாளர்கள்! - கர்நாடக தேர்தலில் சுவாரஸ்யம்!

41 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகளில் வென்ற வேட்பாளர்கள்! - கர்நாடக தேர்தலில் சுவாரஸ்யம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

41 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வேட்பாளர் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 13ஆம்  நடைபெற்று முடிவுகள் வெளியாகின. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது.

ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினாலும், கணிசமான தொகுதிகளிலும் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டிக்கு மத்தியில் தான் வெற்றி தோல்வி முடிவு செய்யப்பட்டுள்ளன.

தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தாலும், பாஜக 36 சதவீத வாக்குகளை தக்கவைத்துள்ளது. அதேவேளை, ஜேடிஎஸ் தனது வாக்குவங்கியை வெகுவாக இழந்துள்ளது.

அதேநேரம் பல்வேறு தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி கணக்குகள் மாறியுள்ளன. புள்ளிவிவரங்களின் படி, மிகக் குறைவான வாக்கு வித்தியாசம் வெற்றி என்பது பெங்களூருவின் ஜெயநகர் தொகுதியில் பதிவாகியுள்ளது.

இங்கு பாஜக வேட்பாளர் வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.  அதற்கு அடுத்தபடியாக காந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல சிருங்கேரி மற்றும் மலுர் தொகுதிகளில் முறையே 201, 248 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 8 தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்வி நிர்ணயமானது.

இதையும் படிங்க: என் பிறந்தநாள் பரிசு..! - கர்நாடக முதல்வர் குறித்த கேள்விக்கு டி.கே.சிவகுமார் வைத்த சஸ்பென்ஸ்

15 தொகுதிகளில் 3,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்வி முடிவு செய்யப்பட்டது. அதோபோல 41 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வேட்பாளர் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 41 தொகுதிகளில் 22இல் காங்கிரஸ் வேட்பாளரும், 16இல் பாஜக வேட்பாளரும், 3இல் ஜேடிஎஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

First published:

Tags: BJP, Congress party, Karnataka Election 2023