கர்நாடக மாநிலத்தில் வரும் 10 ஆம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலையுடன் பரப்புரை முடிய உள்ள நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் தங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 26 கிலோமீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று இரண்டாவது நாளாக 10 கிலோமீட்டர் தூர சாலை பேரணியின்ல பிரதமர் மோடி பங்கேற்றார். அதற்கு முன்னதாக கர்நாடகாவைச் சேர்ந்த 16ஆம் நூற்றாண்டு மன்னரான கெம்பே கவுடா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் திறந்த நிலை பரப்புரை வாகனத்தில் நின்றபடி பேரணியில் பயணித்தார். கெம்பே கவுடா சிலையில் இருந்து எம்.ஜி. சாலையில் உள்ள trinity circle வரை வழிநெடுகிலும் பிரதமருக்கு பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சிவமோகாவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பின்னர் மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சாகுட் பகுதியில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வார சிவன் கோயிலில் பிரதமர் வழிபாடு மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் மின்வெட்டு.. அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை
பிரதமரைப் போலவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி, பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர்களான யோகி ஆதித்யநாத், ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கர்நாடகாவில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Karnataka Election 2023, PM Modi, PM Narendra Modi