முகப்பு /செய்தி /இந்தியா / உள்ளே.. வெளியே.. சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்..!

உள்ளே.. வெளியே.. சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்..!

கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருகட்சிகளைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிரம் காட்டுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. நாளையுடன் வேட்புமனுத்தாகல் நிறைவடையும் நிலையில், பாஜக 222 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 216 இடங்களுக்கும் பட்டியலை வெளியிட்டுள்ளன.

போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருகட்சிகளைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். குறிப்பாக பாஜகவிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் விலகிய நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவர் ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக உள்ள ஹூப்ளி தார்வாத் மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read:  சினிமாவை மிஞ்சும் கதை... நேரலையில் நடந்த கொலை... இந்தியாவையே அதிரவைத்த உ.பி. தாதா கொலை வழக்கில் நடந்தது என்ன?

இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மகேஷ், மூருசாவிர் மட அதிபதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது பேசிய மடாதிபதி ராஜயோகிந்திரா, லிங்காயத் சமூக வாக்குகள் பாஜகவுக்குத்தான் என்றார். இதனிடையே தேவதுர்கா தொகுதியில் இடம் வழங்கப்படாததால் காங்கிரஸிலிருந்து விலகியுள்ள முன்னாள் எம்.பி. பி.வி.நாயக் பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு மான்வி தொகுதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

top videos

    இதேபோல புலிகேசிநகர் தொகுதியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாச மூர்த்தி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் மட்டுமல்லாமல் பாஜகவிலும் அதிருப்தி குரல்கள் ஒலிக்கின்றன. சித்தாபூர் தொகுதியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் பாஜக கலபுரகி இளைஞர் அணி தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் லோக்போல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 131 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு 69 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது.

    First published:

    Tags: BJP, Congress, Karnataka Election 2023