முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா தேர்தல்: ”அண்ணாமலை வருகை பாஜகவை வலுவிழக்கவே செய்தது..” - சசிகாந்த் செந்தில்

கர்நாடகா தேர்தல்: ”அண்ணாமலை வருகை பாஜகவை வலுவிழக்கவே செய்தது..” - சசிகாந்த் செந்தில்

சசிகாந்த் செந்தில்

சசிகாந்த் செந்தில்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான சசிகாந்த் செந்தில் கர்நாடக தேர்தல் குறித்த தனது அனுபவங்களை, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகாவில் அண்ணாமலையின் வருகை பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாகவே இருந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் மையத்தின் ஒருங்கிணைப்பாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான சசிகாந்த் செந்தில் பணியாற்றினார். அதே சமயம், பாஜகவின் தேர்தல் பணிகளை கவனிக்க இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

top videos

    இந்நிலையில், தேர்தல் குறித்த தனது அனுபவங்களை சசிகாந்த் செந்தில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியுடன் பகிர்ந்து கொண்டார். அதில்,  கர்நாடகாவில் அண்ணாமலையின் வருகை பாரதிய ஜனதா கட்சிக்கு  பின்னடைவாகவே இருந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: BJP, Congress, Karnataka Election 2023