முகப்பு /செய்தி /இந்தியா / மகாத்மா காந்தியைப் போல மக்கள் மனதில் இடம்பிடித்தீர்கள்- ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து

மகாத்மா காந்தியைப் போல மக்கள் மனதில் இடம்பிடித்தீர்கள்- ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து

கமல்ஹாசன், ராகுல் காந்தி

கமல்ஹாசன், ராகுல் காந்தி

karnataka election results | கர்நாடகாத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 136 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது.

பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியான நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘கர்நாடகாவில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி... ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் வெற்றியை பெற கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்த தொண்டர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.. இந்த வெற்றி எல்லா மாநிலத்திலும் தொடரும். அவதூறான மொழியைப் பேசி நாங்கள் சண்டையிடவில்லை.

நாங்கள் கர்நாடகா மாநிலத்தின் ஏழைகளுக்காக சண்டையிட்டோம். வெறுப்பு அரசியல் கர்நாடகாவில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அன்பு வெற்றி பெற்றுளது. காங்கிரஸ் கட்சி அளித்த ஐந்து வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் வெற்றிக்கு கமல்ஹாசன் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘மகாத்மா காந்தியைப் போல உங்கள் வழியில் நீங்கள் நடந்து மக்களின் இதயத்தில் இடம் பிடித்தீர்கள். அன்பு மற்றும் பணியுடன் நேர்மையான வழியில் நடந்தால் உலகின் மிகப் பெரிய அதிகாரமையத்தையும் அசைக்க முடியும் என்பதை காந்தி உங்களுக்கு செய்து காட்டியுள்ளார்.

திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக முற்றிலும் அகற்றம்- காங்கிரஸுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரிவினையை நிராகரிக்க வேண்டும் என்று மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கைவைத்து ஒற்றுமையாக அதை செய்து முடித்துள்ளார்கள். உங்கள் வெற்றிக்காக மட்டும் வாழ்த்துகள் இல்லை, வெற்றி பெற்ற வழிமுறைக்காவும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Kamal hassan, Karnataka Election 2023, Rahul Gandhi