முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா மாநிலப் பாடல் இசைக்கப்படுவதுதான் நியதி; தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கவில்லை - சர்ச்சைக்கு அண்ணாமலை விளக்கம்

கர்நாடகா மாநிலப் பாடல் இசைக்கப்படுவதுதான் நியதி; தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கவில்லை - சர்ச்சைக்கு அண்ணாமலை விளக்கம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படவில்லை என்று நியூஸ்18 தமிழ்நாடு- தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். நேற்று சிவமோக-வில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கர்நாடகா பாஜக மூத்த தலைவரான ஈஸ்வரப்பாவுடன் அண்ணாமலை பங்கேற்ற போது, தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், சர்வக்ன நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் நியூஸ்18 தமிழ்நாடு-க்கு அண்ணாமலை பிரத்யேகமாக அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ’தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ”கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலில் அம்மாநில பாடல் தான் ஒலிபரப்பப்பட வேண்டும், அதுதான் நியதி” என்று கூறியுள்ளார்.

Also Read : பிரதமரின் மன் கீ பாத் உரைகளில் அதிகம் இடம்பெற்ற தமிழ்நாடு... ஆய்வில் வெளிவந்த தகவல்!

தொடர்ந்து, கர்நாடகாவில் நடைபெறும் கூட்டத்தில் அம்மாநில கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஈஸ்வரப்பா விரும்புகிறார். ஒலி பெருக்கி அமைப்பாளர் தெரியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பிவிட்டார், அதுவும் முழுமையாக இல்லை. ஆனாலும் அதை மதித்து நான் எழுந்து நின்றேன். இதை ஈஸ்வரப்பா கவனித்துவிட்டார்.

top videos

    அதனைத்தொடர்ந்து, ஈஸ்வரப்பா அம்மாநில பாடலை ஒலிபரப்ப வைத்தார். அது தான் நியதியும் கூட என்று அண்ணாமலை கூறியுள்ளார். தொடர்ந்து, திமுக பற்றிப் பேசிய அவர், திமுகவினால் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒருவரிகூட பாடவைக்க முடியுமா என்று பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார். ஆனால் எங்களால் முடியும் என்று கூறியுள்ளார்.

    First published:

    Tags: Annamalai, Karnataka, Karnataka Election 2023