கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அரசுப் பேருந்தில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று கூறினார்.
200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் மூன்றாயிரம் ரூபாய், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மாதந்தோறும் இலவசமாக 10 கிலோ அரிசி என ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி 4 வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இதையும் படிங்க; தேர்தலில் இலவசக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டும்- பிரதமர் மோடி
இந்நிலையில், ஐந்தாவதாக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன், இந்த அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்ட திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதி அளிக்காத திட்டங்களையும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Congress, Karnataka Election 2023