முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல்- ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல்- ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

மாதிரி படம்

மாதிரி படம்

Karnataka Election 2023 | கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் 2 ,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 5,31,33,054 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 58,282 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், 11,617 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் என ஒரு லட்சத்து 56,000 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மணிப்பூர் வன்முறை : 1,700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேர் உயிரிழப்பு..

 இந்நிலையில், தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

First published:

Tags: Karnataka Election 2023