முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காரை நிறுத்தி சோதனை... தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி...!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காரை நிறுத்தி சோதனை... தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி...!

முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை

முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன சோதனை தீவிரமடைந்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் காரை நிறுத்தித் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முந்தைய தேர்தல்களைவிட தற்போது அதிகளவில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் தொட்டபல்லாபுராவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்றார். செல்லும் வழியில் திடீரென முதலமைச்சரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read : நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா... புது லுக்கில் ரஜினிகாந்த்... மகள் பகிர்ந்த புகைப்படம்..!

top videos

    காரை சோதனையிட்ட அதிகாரிகள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து பயணிக்க அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. முதலமைச்சரின் வாகனம் தேர்தல் பறக்கும் படையால் நிறுத்தப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாகியுள்ளது.

    First published:

    Tags: Election, Karnataka