முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு... டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு...!

காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு... டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு...!

கர்நாடக சட்டப்பேரவைத்   தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்

Karnataka Election Exit Polls 2023 | காங்கிரஸ் கட்சி 106 முதல் 120 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu |

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் நிறைவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறுவிப்பாக நடைபெற்றது. இன்று பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

பிரபல செய்தி நிறுவனமான  டைம்ஸ்- நவ் நடத்திய கருத்துக் கணிப்பில், " காங்கிரஸ் கட்சி 106 முதல் 120 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், தற்போதைய ஆளுங்கட்சியான பாஜக 79  முதல் 92 தொகுதிகளைக் கைப்பற்றும்" என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, ரிபப்ளிக் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 84 - 100 தொகுதிகள் வரையும், காங்கிரஸ் 94- 108 வரையிலும், மஜத 24 - 32 தொகுதிகள் வரையிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜி நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 103 முதல் 118  இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், தற்போதைய ஆளுங்கட்சியான பாஜக 79  முதல் 94  தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: BJP, Congress, Karnataka Election 2023