முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்... கருத்துக் கணிப்பில் தகவல்..!

கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்... கருத்துக் கணிப்பில் தகவல்..!

கர்நாடக காங்கிரஸ்

கர்நாடக காங்கிரஸ்

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் மக்கள் மனநிலை குறித்து கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்று ஏபிபி - சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள  222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று, புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் 20 வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள ஏப்ரல் 24 கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் மக்கள் மனநிலை குறித்து கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. பிரபல ஏபிபி- சிவோட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், " காங்கிரஸ் கட்சி 115 முதல் 127 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், தற்போதைய ஆளுங்கட்சியான பாஜக 68 முதல் 80 தொகுதிகளைக் கைப்பற்றும்" என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, ஜீ நியூஸ் வெளியிட்ட மற்றொரு கருத்துக் கணிப்பில், பாஜக 96 முதல் 106 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சி 88-98 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 23- 33 இடங்களைக் கைப்பற்றி மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில், 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தாலும் அதற்கு  பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து, 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சியும், 33 இடங்களைக் கைப்பற்றிய மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்த கூட்டணி தொடக்கத்தில் இருந்தே பல்வேறு முரண்பாடுகளை சந்தித்து வந்த நிலையில், 14 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் , மூன்று மதச்சார்பற்ற ஜனதா கட்சி எம்எல்ஏ-க்களும் பாஜகவுக்கு தாவினார். இதனையடுத்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. கட்சித் தாவிய உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: BJP, Congress, Karnataka Election 2023