முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா | பாஜகவிலிருந்து காங்கிரஸில் இணைந்த லக்ஷ்மன் சவடிக்கு அவர் விரும்பிய அதனி தொகுதியில் வாய்ப்பு...

கர்நாடகா | பாஜகவிலிருந்து காங்கிரஸில் இணைந்த லக்ஷ்மன் சவடிக்கு அவர் விரும்பிய அதனி தொகுதியில் வாய்ப்பு...

லஷ்மண் சவடி

லஷ்மண் சவடி

Karnataka Election 2023 | 43 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் லக்ஷ்மன் சவடிக்கு அவர் விரும்பிய அதனி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாஜக 2 கட்டங்களாக 212 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் வாய்ப்பு கிடைக்காத நடப்பு எம்.எல்.ஏ.-க்கள் பலர் கட்சியில் இருந்து விலகினர். குறிப்பாக அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவடி அதிருப்தி அடைந்து காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதையும் படிங்க: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேட்புமனுதாக்கல்!

இந்நிலையில், 43 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், பாஜகவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட லக்ஷ்மன் சவடிக்கு, அவர் விரும்பிய அதனி தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. இதனிடையே கோலார் தொகுதி சித்தராமையாவிற்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வருணா தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறார். கோலார் தொகுதி கோதூர் ஜி.மஞ்சுநாத் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Congress, Karnataka Election 2023