முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப் பதிவு...

கர்நாடகா தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப் பதிவு...

குமார்

குமார்

போலி ஆவணங்கள் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ததாக ஈபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் எனக்கூறி வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் இருந்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் வாபஸ் பெற்றனர். இதனிடையில், காந்தி நகர் சட்டமன்றத் தொகுதியில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த குமார் என்பவர் அதிமுக வேட்பாளர் என்று குறிப்பிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் அவரின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

Also Read : ஓட்டுநர் பாலியல் தொல்லை.. ஓடும் பைக்கில் இருந்து குதித்த பெண்.. அதிர்ச்சி வீடியோ

காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் போலி ஆவணங்களைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ததாக ஈபிஎஸ் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

ஈபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனு ஏற்கப்பட்டு, தேர்தல் அலுவலர் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து, பெங்களூரு காட்டன்பேட் காவல்நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: ADMK, EPS, Karnataka Election 2023, OPS