முகப்பு /செய்தி /இந்தியா / "பெண்களுக்கு பஸ் பாஸ்.. 3 சிலிண்டர்கள்.. தினமும் அரை லிட்டர் பால்.. .!” - கர்நாடக தேர்தலில் இலவசங்களை அள்ளி வீசிய பாஜக

"பெண்களுக்கு பஸ் பாஸ்.. 3 சிலிண்டர்கள்.. தினமும் அரை லிட்டர் பால்.. .!” - கர்நாடக தேர்தலில் இலவசங்களை அள்ளி வீசிய பாஜக

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Karnataka Election BJP Manifesto Release | கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பாஜக பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஆளும் பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

பாஜக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள். பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுக்கு வழங்கப்படும். பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சட்டவிரோத குடியேறிகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி பிரச்சார வாகனம் மீது விழுந்த செல்போன்... நடந்தது என்ன?

மேலும் ஏழைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும் என்பது இந்த அறிக்கையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி நாட்களில் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் வழங்குவோம். வயதானவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும்.வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சூரிய ஒளி பம்பு செட் அமைப்பவர்களுக்கு 80% மானியம் வழங்கப்படும் என பாஜக வெளியிட்டுள்ள கர்நாடக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

top videos
    First published:

    Tags: Karnataka Election 2023