முகப்பு /செய்தி /இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.2000.. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.2000.. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Karnataka congress | கர்நாடக தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

top videos

    வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Congress, Karnataka Election 2023