முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவுக்கு 2 முதலமைச்சர்...? சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்க காங்கிரஸ் முடிவு..!

கர்நாடகாவுக்கு 2 முதலமைச்சர்...? சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்க காங்கிரஸ் முடிவு..!

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

சித்தராமையா முதலமைச்சராக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கண்டிரவா மைதானத்தில் பதவியேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவை காங்கிரஸ் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. அடுத்த முதலமைச்சராக யாரை அறிவிப்பது என்பது குறித்து டெல்லியில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது ராகுல்காந்தியின் இல்லத்தில் முதலில் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சித்தராமையாவைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமாரும் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவக்குமாரை முதலமைச்சராக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டரை ஆண்டுகள் சிவக்குமார் துணை முதலமைச்சராக செயல்படுவார் என்றும், அத்துடன் அவர், உள்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி கேட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க; காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகுகிறேனா.? - டி.கே.சிவக்குமார் விளக்கம்

சித்தராமையா முதலமைச்சராக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கண்டிரவா மைதானத்தில் பதவியேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூத்த எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், சிவக்குமாருக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவி நீட்டிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த முதல்வர் சித்தராமையாதான் என உறுதி செய்யப்படுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள சித்தராமையா இல்லம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Karnataka Election 2023