முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகுகிறேனா.? - டி.கே.சிவக்குமார் விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகுகிறேனா.? - டி.கே.சிவக்குமார் விளக்கம்

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் கட்சி எனக்கு தாய் போன்றது என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவியை குறித்து வைத்து சித்தராமையா, டி.கே சிவக்குமார் ஆகியோர் காய் நகர்த்தி வருவதால், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதல் முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். மேலும், கே.சி வேணுகோபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது, புதிய முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : "மாநில தலைமையை முன்நிறுத்துங்கள்..!" காங்கிரஸின் கலகக்குரலா? கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக பரவும் தகவல் தவறு என விளக்கமளித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி எனக்கு தாய் போன்றது என்றார்.

top videos
    First published:

    Tags: Congress, DK Shivakumar, Karnataka