முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக அரசியல்... ஒருமுறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்யாத பாஜக முதல்வர்கள்..!

கர்நாடக அரசியல்... ஒருமுறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்யாத பாஜக முதல்வர்கள்..!

பாஜக

பாஜக

கர்நாடகத்தில் இசை நாற்காலி போல முதலமைச்சர்கள் மாறிக்கொண்டே இருப்பது தொடர்கதையாக உள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டமன்றம் மிகப்பழமை வாய்ந்த சட்டப்பேரவைகளில் ஒன்றாகும். நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு கர்நாடகாவில் 2007ஆம் ஆண்டுவரை பாஜகவால் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி ஆட்சியைப் பிடித்த பாஜக, எடியூரப்பாவை முதலமைச்சராக்கியது. கேட்ட அமைச்சர் பதவி தரவில்லை என்பதால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால் எடியூரப்பாவின் ஆட்சிக்காலம் 8 நாட்களில் முடிவுக்கு வந்தது.

2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, மீண்டும் எடியூரப்பாவை முதல்வராக்கியது. இந்த முறை அவரின் ஆட்சிக்காலம் 3 ஆண்டுகள் 6 நாட்கள் மட்டுமே இருந்தது. பின்னர் 2011 ஆகஸ்ட் 4 ஆம் தேதி நில மோசடி புகாரில் பதவி விலகினார். எடியூரப்பா பதவி விலகிய அடுத்த நாளே பாஜகவைச் சேர்ந்த சாதனந்த கவுடா பதவி ஏற்றார். அவர் 342 நாட்கள் முதலமைச்சராகப் பதவி வகித்தார் . உட்கட்சி பிரச்னை காரணமாக சதானந்த கவுடா பதவி விலகிய அடுத்த நாளே, ஜெகதீஷ் ஷெட்டர் பதவி ஏற்றார். அவரின் ஆட்சிக் காலமும் 305 நாட்கள் மட்டுமே இருந்தது.

Also Read : ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு..

2013 ஆம் ஆண்டு தேர்தலில் பலத்த பின்னடைவைச் சந்தித்த பாஜக, 2018ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அப்போது எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 6 நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த பாஜக, எடியூரப்பாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது. இந்த முறை 2019 முதல் 2021 வரை அவர் 2 ஆண்டுகள் 2 நாட்கள் பதவி வகித்தார்.

top videos

    எடியூரப்பாவை திடீரென முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்த பாஜக மேலிடம், பசவராஜ் பொம்மையை தற்போது முதலமைச்சராக அமர வைத்துள்ளது.

    First published:

    Tags: BJP, Karnataka