முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக அமைச்சரவையில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்? - லிஸ்ட் இதோ!

கர்நாடக அமைச்சரவையில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்? - லிஸ்ட் இதோ!

கர்நாடக அமைச்சரவை  பதவியேற்பு (கோப்பு படம்)

கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு (கோப்பு படம்)

Karnataka Swearing-In-Ceremony: கர்நாடக அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி தொடர்வதால், 20 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 பேர் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் யாருக்கு அமைச்சர் பதவி அளிப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த சூழலில், இன்று 8 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் கண்டீரவா மைதானத்தில் பதவியேற்க இருக்கின்றனர்.

இந்த சூழலில் முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்து சித்தராமையாவும், சிவக்குமாரும் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதையும் படிங்க : 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்... பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த டாஸ்மாக் நிர்வாகம்!

அதிகாலை 2 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. சித்தராமையா, சிவக்குமார் தரப்பு ஆதரவாளர்களில் தலா 10 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கருதப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக 8 பேர் மட்டுமே இன்று பதவியேற்பார்கள் என்று கர்நாடக வட்டாரங்கள் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் 8 பேர்கொண்ட பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, M.P.பாட்டீல், பரமேஸ்வரா, முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிஹோலி, ஜமீர் அகமது கான், ராமலிங்கா ரெட்டி, பிரியங் கார்கே ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர்.

First published: