முகப்பு /செய்தி /இந்தியா / ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முன் உடலில் பலூனை கட்டிக்கொண்ட தொழிலதிபர் - கலங்க வைக்கும் காரணம்!

ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முன் உடலில் பலூனை கட்டிக்கொண்ட தொழிலதிபர் - கலங்க வைக்கும் காரணம்!

ஆற்றில் தென்பட்ட பலூன்

ஆற்றில் தென்பட்ட பலூன்

கர்நாடகாவில் 69 வயதான தொழிலதிபர் ஒருவர் உடலில் பலூன் கட்டிக்கொண்டு பாலத்தின் மீதிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் 69 வயதான தொழிலதிபர் சந்திரசேகர பூஜாரி கடந்த மே மாதம் 27 ஆம் தேதி பாலூனை உடலில் கட்டிக்கொண்டும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சந்திரசேகர பூஜாரி  ஹார்டுவேர் கடையின் உரிமையாளர் மற்றும் அலங்காரு மூர்த்தேதரரா சேவா சககாரி என்ற சங்கத்தின் தலைவராகவும்  இருந்தவர். இவர் கடந்த மாதம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சாந்திமோகரு அருகே இருக்கும் குமாரதாரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் ஆற்றில் குதிப்பதற்கு முன்பு அவரின் உடலில் பலூனை கட்டிகொண்டுள்ளார். ஆற்றில் பலூன்கள் மிதப்பதை கண்ட கிராமவாசிகள் அருகே சென்று பார்த்த போது பூஜாரியின் உடலை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து இறந்தவரின் கார் ஆற்றின் மேலே உள்ள பாலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.  அதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அவரின் உடலை மற்றவர்கள் எளிதாக கண்டுப்பிடிக்க ஏதுவாக அவர் உடலில் பலூனை கட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  விசாரணையின் போது தற்கொலை செய்து கொண்டு இறந்த பூஜாரியிடமிருந்து சூசைட் நோட் கண்டெடுக்கப்பட்டது.

Also Read : அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸாக மாத சம்பளம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அரசு!

அதில் தனது மகன்களுக்கு தாயை நன்றாக பார்த்துகொள்ளுங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்திருந்தார். மேலும், கார் சாவி வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய குறிப்பு இடம்பெற்று இருந்தது.  மன உளைச்சலின் காரணத்தினால் தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

First published:

Tags: Local News