முகப்பு /செய்தி /இந்தியா / "3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்றைக்குள் வெளியிடாவிட்டால்..." - ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

"3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்றைக்குள் வெளியிடாவிட்டால்..." - ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

 ஜெகதீஷ் ஷெட்டர்

ஜெகதீஷ் ஷெட்டர்

Jagadish Shettar | முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரையும் போட்டியிட வேண்டாம் என பாஜக கூறியதாக தகவல் வெளியான நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக தேர்தலுக்கு இன்றைக்குள் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக, ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, ஆளும் பாஜக கடந்த 11ஆம் தேதி 189 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், கடந்த புதன்கிழமை 23 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு கட்ட பட்டியலிலும் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதோடு, தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் பலருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகல்... காங்கிரஸில் இணைந்த முன்னாள் துணை முதல்வர்... கர்நாடக அரசியலில் பரபரப்பு..!

top videos

    இதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரையும் போட்டியிட வேண்டாம் என பாஜக கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், தான் உறுதியாக போட்டியிட இருப்பதாக கூறியுள்ள ஜெகதீஷ் ஷெட்டர், இன்றைக்குள் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு, வெளியிடாவிட்டால், ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    First published:

    Tags: BJP, Karnataka Election 2023