கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 நேரலை : ஆட்சியமைக்கும் காங்கிரஸ்.. முதல்வர் தேர்வு தீவிரம்

Karnataka Election Results 2023 Live Updates: 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்களே தேவை என்ற நிலையில், காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் அடுத்த முதல்வர் சித்தாராமையாவா அல்லது சிவக்குமரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா முதல்வர் யார் என்பது நாளை (மே 14) முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க ...
13 May 2023 21:59 (IST)

கர்நாடக தேர்தல் முடிவு - முழு விவரம்

நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் 136 தொகுதிகளிலும் பாஜக 65 இடங்களிலும் வெற்றியை உறுதி செய்யும் நிலையில் உள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றியை உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே இவ்விவகாரத்தில் கடும் போட்டி எழுந்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் முறைபடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னுடைய பதவியை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்துள்ளார்.

——————

13 May 2023 21:06 (IST)

நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் - டி.கே சிவகுமார்

நாளை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் முறைபடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் – டி.கே சிவகுமார்

13 May 2023 18:59 (IST)

ராஜினாமா செய்யும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

சிக்கோனில் இருந்து பசவராஜ் பொம்மை பெங்களூர் புறப்பட்டார். இன்று இரவு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.

13 May 2023 18:59 (IST)

ராஜினாமா செய்யும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

சிக்கோனில் இருந்து பசவராஜ் பொம்மை பெங்களூர் புறப்பட்டார். இன்று இரவு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.

13 May 2023 18:52 (IST)

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? அவசர ஆலோசனை

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மல்லிக்கார்ஜீன கார்கே இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. டி.கே.சிவகுமார், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜீவாலா, கே.சி.வேணுகோபால் பங்கேற்று ஆலோசித்து வருகின்றனர்

13 May 2023 18:47 (IST)

கர்நாடகா வாக்கு எண்ணிக்கை: ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்!

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்களே தேவை என்ற நிலையில், காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் அடுத்த முதல்வர் சித்தாராமையாவா அல்லது சிவக்குமரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா முதல்வர் யார் என்பது நாளை (மே 14) முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

13 May 2023 17:48 (IST)

மரண அடி என்பது தான் உண்மை - கே. பாலகிருஷ்ணன்

கர்நாடகாவில் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டும் கூட பாஜக மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது. இது கர்நாடகாவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. அகில இந்திய பாஜகவிற்கும், மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கின்ற மரண அடி என்பது தான் உண்மை – கே. பாலகிருஷ்ணன்

13 May 2023 17:47 (IST)

அரசியலில் ஒரு திருப்புமுனை - கே.பாலகிருஷ்ணன்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது. – சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

13 May 2023 17:45 (IST)

யார் வென்றாலும் ஒன்றுதான்... - அதிரடியாக பேசிய சீமான்.. 

காங்கிரஸ், பாஜக யார் வென்றாலும் ஒன்றுதான்… – அதிரடியாக பேசிய சீமான்.. முழு விவரம்

13 May 2023 17:31 (IST)

கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 நேரலை: குஷ்டகி தொகுதி

குஷ்டகி தொகுதியில் பாஜக வேட்பாளர் டோட்னா கவுடா வெற்றி பெற்றார்

13 May 2023 17:24 (IST)

காங்கிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பாராட்டுகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் – பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

13 May 2023 17:10 (IST)

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்

கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், இதுவரை 114 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. மேலும் 22 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

 

13 May 2023 17:03 (IST)

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் - உதயநிதி

“கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் – மதவாதம் – மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

13 May 2023 16:58 (IST)

பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர் - வைகோ

“கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்து இருக்கின்றது. பாஜகவின் ஏதேச்சாதிகார, மதவெறி அரசியலுக்கு கர்நாடக மக்கள் தக்கப் பாடம் புகட்டி இருக்கிறார்கள். கர்நாடகாவில் மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது போல, 2024 நாடாளுமன்றத்தேர்தலிலும் இந்தியா முழுவதும் நடக்கும். கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

 

13 May 2023 16:51 (IST)

ராகுல்காந்தியை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்..

மகாத்மா காந்தியைப் போல.. ராகுல்காந்தியை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்.. முழு விவரம்

13 May 2023 16:45 (IST)

மஜத தலைவர் வெற்றி

13 May 2023 16:35 (IST)

கர்நாடக தேர்தல் வெற்றி.. ராகுல்காந்தி ரியாக்‌ஷன்

கர்நாடக தேர்தல் வெற்றி.. ராகுல்காந்தி ரியாக்‌ஷன் இதுதான்.. விவரம்

13 May 2023 16:29 (IST)

 ‘பாஜக இல்லாத தென்இந்தியா’ - சட்டீஸ்கர் முதல்வர்

‘பாஜக இல்லாத தென்இந்தியா’ – சட்டீஸ்கர் முதல்வர் பதிலடி..! விவரம்

13 May 2023 16:23 (IST)

வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள் - கமல்ஹாசன்

பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள் – கமல்ஹாசன்

13 May 2023 16:22 (IST)

காந்திஜியைப் போலவே - ராகுல்காந்தியை புகழ்ந்த கமல்ஹாசன்

காந்திஜியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள், அவரைப் போலவே நீங்கள் உங்கள் மென்மையான வழியில் உலகின் சக்திகளை – அன்புடனும் பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்தீர்கள் – கமல்ஹாசன்

കൂടുതൽ വായിക്കുക