முகப்பு /செய்தி /இந்தியா / ரிசார்ட்.. ஹெலிகாப்டர் ரெடி... காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்...!

ரிசார்ட்.. ஹெலிகாப்டர் ரெடி... காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்...!

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

Karnataka Election Results 2023 | வெற்றிபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கவைக்க தேவனஹள்ளியில் ரிசார்ட்டும் தயாராக உள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைமை முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 109 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 82 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் கர்நாடகாவில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து கட்சித் தாவலை தடுக்கும் முயற்சியாக முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை பெங்களூருக்கு வருகை தர அழைப்பு கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க; கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 நேரலை : டி.கே.சிவக்குமார் தொடர்ந்து முன்னிலை

கடலோர கர்நாடகா உள்ளிட்ட பெங்களூரு நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும் தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும்  வேட்பாளர்களை 12 ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக அழைத்து வர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. வெற்றிபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கவைக்க தேவனஹள்ளியில் ரிசார்ட்டும் தயாராக உள்ளது.

top videos
    First published:

    Tags: Karnataka Election 2023