முகப்பு /செய்தி /இந்தியா / ‘Congress mukt-Bharat’னு பேசுனீங்க இப்போது ‘பாஜக இல்லாத தென்இந்தியா’ - சட்டீஸ்கர் முதல்வர் பதிலடி..!

‘Congress mukt-Bharat’னு பேசுனீங்க இப்போது ‘பாஜக இல்லாத தென்இந்தியா’ - சட்டீஸ்கர் முதல்வர் பதிலடி..!


அமித்ஷா - பிரதமர் நரேந்திர மோடி

அமித்ஷா - பிரதமர் நரேந்திர மோடி

Karnataka Assembly Election Results 2023 Live Updates in Tamil: அவர்கள் (பாஜக) காங்கிரஸ் இல்லாத பாரதத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர், ஆனால் தற்போது தென் இந்தியாவில் பாஜக இல்லாமல் போனது’ - சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை இடங்களை காங்கிரஸ் கட்சி பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் இல்லாத இந்தியா (Congress mukt-Bharat) என்ற பாஜக பிரச்சாரத்துக்கு பதிலடி தரும் வகையில் ‘பாஜக இல்லாத தென் இந்தியா ஆகிவிட்டதாக சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தொடர்ந்து அதிக காலத்துக்கு ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி சமீப காலங்களாக பாஜகவின் எழுச்சிக்கு பின்னர், வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சியானது கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்ததுடன், மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெற்றுள்ளது.

ஆளும் பாஜகவோ பல ஆண்டுகளாக ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா - Congress mukt-Bharat’ என்ற பிரச்சாரத்தை பிரதானமாக அடையாளப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா முதலான பாஜகவின் தலைவர்கள் பலரும் இந்த பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க : கர்நாடக தேர்தல் ரேஸில் முந்தும் 3 சுயேட்சைகள்.. பிரதான கட்சிகளுக்கு தண்ணி காட்டும் யார் இவர்கள்?

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென திட்டமிட்டு பாஜக செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய கர்நாடக தேர்தல் இதற்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இதனிடையே இன்றைய கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகமும் தெம்பும் கிடைத்திருக்கிறது. கர்நாடகாவில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பிந்தங்கிவிட்ட நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி உறுதியாகியிருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் கர்நாடக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான சட்டீஸ்கரின் முதல்வர் பூபேஷ் பாகெல் செய்தியாளர்களிடையே பேசுகையில், ‘முதலில் காங்கிரஸ் ஹிமாச்சல் பிரதேசத்தில் (2022 தேர்தல்) வெற்றி பெற்றது, தற்போது கர்நாடகாவில் வென்றுள்ளது. அவர்கள் (பாஜக) காங்கிரஸ் இல்லாத பாரதத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர், ஆனால் தற்போது தென் இந்தியாவில் பாஜக இல்லாமல் போனது’ என்றார்.

First published:

Tags: BJP, Congress, Karnataka, Karnataka Election 2023