முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக சட்டமன்ற தேர்தல்... 22 லட்சம் லிட்டர் மதுபானம் பறிமுதல்... பணம் மட்டும் இவ்வளவா?

கர்நாடக சட்டமன்ற தேர்தல்... 22 லட்சம் லிட்டர் மதுபானம் பறிமுதல்... பணம் மட்டும் இவ்வளவா?

கர்நாடக தேர்தல் 2023

கர்நாடக தேர்தல் 2023

ரூ. 288 கோடி மதிப்பிலான சொத்துக்கள், அமலாக்க துறை முகமை அதிகாரிகளால் (Enforcement Directorate) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

  • Last Updated :
  • Tamil Nadu |

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி வரை ரூ. 375.61 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இது கடந்த 2018 சட்டமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட (ரூ. 83.93 கோடி) 4.5 மடங்கு கூடுதலாகும்.

பறிமுதல் செய்யப்பட்டவைகளில்  ரூ. 147.46 கோடி ரொக்கம், ரூ. 96.60 கோடி மதிப்புள்ள உலோகங்கள், ரூ. 24.21 கோடி மதிப்பில் இலவசப் பொருட்கள், ரூ. 83.66 கோடி மதிப்பிலான மதுபானம் (கிட்டத்தட்ட 22,27,045 லிட்டர் ), ரூ. 23.67 கோடி மதிப்பில் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.

மார்ச் மாதத்தின் 2வது வாரத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்த பயணத்திற்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் வரை ரூ. 83.78 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பிறகு ரூ. 288 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிர்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடந்த மே 1-ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Karnataka Election 2023