கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வாக்கு சேகரிப்பில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக கட்சியின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி, இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
எதிர்க்கட்சிகள் குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி என்னை மீண்டும் அவதூறு செய்யத் தொடங்கியுள்ளனர். என்னை விஷப் பாம்பு என்கின்றனர். ஆனால், சிவனின் கழுத்துச் சங்கிலி தான் பாம்பு. என்னைப் பொறுத்தவரையில் இம்மாநில மக்கள் தான் சிவா. என் மீதான வசைபாடுகள் தொடரட்டும். ஆனால், பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்று தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள ஒற்றை குடும்பத்திற்கு அல்லும் பகலுமாக கர்நாடகா காங்கிரஸ் உழைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கும், அந்த குடும்பம் பச்சைக் கொடி காட்ட வேண்டும். மதச்சார்பற்ற ஜன தளம், ஒரு குடும்பம் நடத்தும் தனியார் நிறுவனம் ஆகும்" என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் ஆளும் அனைத்து இடங்களிலும் பதவி சண்டைகள் இருப்பதாகவும், மதசார்பாற்ற ஜனதா தளத்திற்கு செலுத்தும் வாக்குகள், காங்கிரஸிற்கு செலுத்துவது போன்றது என்றும் விமர்சித்தார்.
இதையும் வாசிக்க: அண்ணாமலை பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்..
உடுப்பியில் பரப்புரை மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறினார்.
கலாபுர்கியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை விமர்சித்தது, 140 கோடி மக்களையே அவமதித்தது போன்றது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Narendra Modi