முகப்பு /செய்தி /இந்தியா / மே 10ஆம் தேதி கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல்..!

மே 10ஆம் தேதி கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல்..!

தலைமை தேர்தல் ஆணையர்

தலைமை தேர்தல் ஆணையர்

Karnataka Assembly Election 2023 Schedule Live Updates | 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இரண்டு முறை எடியூரப்பாவும், ஒருமுறை குமாரசாமியும், ஒரு முறை பசவராஜ் பொம்மையும் முதலமைச்சர்களாக ஆட்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளதாகவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கர்நாடகாவில் முதல் முறை வாக்களர்கள் 9.17 லட்சம் பேர் என்றும், கர்நாடகாவில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 42,756 பேர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 1, 2023ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்றும், கர்நாடகாவில் உள்ள பழங்குடியின மக்கள் வாக்களிக்க பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

top videos

    பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது. கர்நாடகத்தில் இட ஒதுக்கீடு பிரச்சனைகள், வடக்கு கர்நாடகத்துக்கு முக்கியத்துவம் குறைவாக அளிக்கப்படுவதாக எழுந்துள்ள பிரச்சனைகளும் அந்த மாநில முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சனையும் முக்கியமானதாக உள்ளது.

    First published:

    Tags: Karnataka, Karnataka Election 2023