முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல் உங்களுடன் நான் இருக்கிறேன் - கமல் ஹாசன் ட்வீட்

ராகுல் உங்களுடன் நான் இருக்கிறேன் - கமல் ஹாசன் ட்வீட்

ராகுல் காந்தி - கமல் ஹாசன்

ராகுல் காந்தி - கமல் ஹாசன்

நாடு முழுவதும் பல அரசியல் கட்சி தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பரப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவுப்படுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நாடு முழுவதும் பல அரசியல் கட்சி தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல் காந்திக்கு ஆதரவாக தன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்திக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், சோதனையான நேரங்களையும், நியாமற்ற தருணங்களையும் ராகுல் காந்தி அதிகளவில் சந்தித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நீதி வழங்குவதில் உள்ள தவறுகளை சரிசெய்யும் அளவுக்கு நம் நாட்டு நீதித்துறை அமைப்பு வலுவாக உள்ளது என்றும் கமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

top videos

    மேலும், 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Congress, Kamal Haasan, Makkal Needhi Maiam, Rahul Gandhi