ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஜியோ இந்தியாவில் முன்னனி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகளில் 40 கோடி வாடிக்ககையாளர்களை பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதோடு இந்தியாவில் 5ஜி சேவை வழங்கும் முன்னணி நிறுவனமாகவும் ஜியோ விளங்குகிறது.
தற்போது இந்தியாவில் 35 மாநிலங்களில் 2,691 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். இந்நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாடு குறித்த அறிக்கையை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் ஜனவரியில் மட்டும் ஜியோ யூசர்கள் 1,000 கோடி ஜிபி டேட்டாவை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த அளவு பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் தொடர்ந்துள்ளது. அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 3,000 கோடிக்கும் அதிகமான ஜிபி டேட்டாவை ஜியோ யூசர்கள் மட்டுமே பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள். அதன்படி சராசரியாக ஒரு ஜியோ யூசர் மாதம் 23 ஜிபி டேட்டைவை பயன்படுத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த அளவு 2021ஆம் ஆண்டில் 13 ஜிபியாக மட்டுமே இருந்தது. இப்போது 10 ஜிபி டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது.
டேட்டா மட்டுமல்லா வாய்ஸ் கால் பேசுவதும் ஜியோ யூசர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஒரு ஜியோ யூசர் ஒரு மாதத்தில் சராசரியாக 1,000 நிமிடங்களை கால் பேசுவதற்காக செலவழிக்கிறார். இப்படி மொத்த யூசர்களும் ஆண்டுக்கு 1,459 கோடி நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் பேசுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். இப்படி டேட்டா மற்றும் வாய்ஸ் காலுக்காக மாதம் 178.8 ரூபாயை ஜியோ யூசர்கள் செலவழிக்கின்றனர்.
இந்த புள்ளிவிவரங்கள் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஜியோ நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு புள்ளி விபரங்கள் மட்டும் தான். கொரோனா காலத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்தது. லாக் டவுன் முழுமையாக நீக்கப்பட்ட பிறகும் இதே சமூக வலைதளங்களின் பயன்பாடு குறையவில்லை. அதனால் டேட்டா செலவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த ஆண்டு முடிவதற்குள் நாடு முழுவதும் தங்கு தடையில்லாமல் 5ஜி சேவை வழங்குவதற்காக நடவடிக்கைகளில் ஜியோ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. எனவே இனி வரும் காலங்களில் ஜியோ வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, விரைவான சேவையை வழங்குவதிலும் ஜியோ நிறுவனம் முன்னனியில் இருப்பதால் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022டிசம்பர் மாத தகவலின்படி ஜியோ கிட்டத்தட்ட 42 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.