ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பெண் குழந்தைகள்….
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள இட்கோரி பகுதியைச் சேர்ந்தவர் தான் அங்கிதா. இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது இந்த தம்பதியினருக்கு உடலில் சில குறைபாடுகள் உள்ளது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹஜாரிபக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து தொடர்ச்சியாக மருத்துவரின் அறிவுரையின் படி, மருத்து மாத்திரைகளை உட்கொண்ட வந்துள்ளார். இந்நிலையில் தான், சில நாள்களுக்கு முன்னதாக திடிரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கருவுற்று 7 மாதங்கள் தான் ஆகியிருந்தது.
இந்நிலையில் தான், அங்கிதா, எப்போதும் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்ற போது, அங்குள்ள மருத்துவர்கள் ஜார்க்கன்டில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் (RIMS) சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர் ஷஷி பாலா சிங் தலைமையில் பிரசவம் நடைபெற்றது. 7 மாத காலம் அதாவது குறைமாத பிரசவம் என்பதால் இக்குழுவினருக்கு மிகவும் சவாலாக இருந்துள்ளது. இருந்தப்போதும் வெற்றிக்கரமாக பிரசவம் நடைபெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதுக்குறித்து மருத்துவர்கள் குழு தெரிவிக்கையில், 7 மாத காலத்தில் வயிற்றில் உள்ள 5 குழந்தைகளை வெளியில் பத்திரமாக எடுப்பது என்பது எங்களுக்கு சவாலாக இருந்தது. இருந்தப்போதும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு குழந்தைகளை வெற்றிக்கரமாக உலகிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவித்தனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளார்கள் என்றும், குறைமாத பிரசவம் என்பதால் குழந்தைகள் எடைக்குறைவாக உள்ளனர். எனவே குழந்தைகளைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் ஜார்க்கன்ட் மற்றும் அண்டை மாநிலமான பீகாரிலும் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது இது தான் முதல் முறை என்கின்றனர்.
மேலும் பிரசவம் பார்த்த மருத்துவர் ஷஷிபாலா சிங் தெரிவிக்கையில், தாய் அங்கிதாவின் வயிற்றில் 5 குழந்தைகள் இருப்பது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் தெரியவந்தது. குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஆபத்தானது என்று சொல்லியிருந்தும் அப்பெண் நான் குழந்தைகளை பெற்றெடுப்பேன் என்று உறுதியுடன் இருந்ததாக மருத்துவர் தெரிவிக்கிறார். இப்போது குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார் எனவும் ஷஷிபாலா சிங் தெரிவிக்கிறார்.
रिम्स के महिला एवं प्रसूति विभाग में इटखोरी चतरा की एक महिला ने पांच बच्चों को जन्म दिया है। बच्चें NICU में डाक्टरों की देखरेख में हैं। डॉ शशि बाला सिंह के नेतृत्व में सफल प्रसव कराया गया। @HLTH_JHARKHAND pic.twitter.com/fdxUBYoPoP
— RIMS Ranchi (@ranchi_rims) May 22, 2023
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் அங்கிதா இதுக்குறித்து கூறுகையில், எங்களுக்குப் பிறந்துள்ள இந்த 5 குழந்தைகளும் வீட்டில் ஒருவரல்ல, இவர்கள் 5 லட்சுகள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். மேலும் நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தனது கணவர் பழ வியாபாரம் தான் மேற்கொண்டுவருவதால் எங்களின் குழந்தைகளை வளர்க்கவும், அவர்களுக்கு முறையான கல்வி கொடுக்கவும் மக்கள் உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்கோரியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார் என்றும், குழந்தைகள் எடைக்குறைவாக உள்ளதால் தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளனர் என ஜார்க்கன்டில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனை (RIMS) நிர்வாகம், டிவிட் செய்திருந்தது. ஏற்கனவே ஒரே பிரசவத்தில் தென் ஆப்பிரிக்காவில் 9 குழந்தைகளும், கர்நாடகாவில் 4 குழந்தைகளும் பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.