ஜார்கண்ட் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ரேபிகா பஹ்ரான் என்ற பெண் கணவர் மற்றும் மாமியார் வீட்டால் கொடூரமான முறையில் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாட்டையே உறைய வைத்த நிலையில், அத்தகைய கொலை சம்பவம் ஒன்று மீண்டும் ஜார்கண்ட்டில் நிகழ்ந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே இடத்தில் அந்த பெண்ணின் உடைகள், பைக் சாவி போன்ற பொருள்களும் எடுக்கப்பட்டன.
அதைக்கொண்டு அடையாளம் காணப்பட்டதில் படுகொலை செய்யப்பட்ட பெண் அப்பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மாலோதி சோரன் என்று கண்டறியப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி உண்மை அம்பலமானது. உயிரிழந்த பெண்ணின் சகோதரி ராணி சோரேன் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மாலோதிக்கு தேலு என்ற நபருடன் பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் இரு ஆண், ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாத காலமாகவே மாலோதியின் கணவர் தேலுவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ள உறவு இருந்துள்ளது. இது மாலோதியின் கவனத்திற்கு வரவே அதை அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவர் தேலு மனைவியை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் வீட்டில் இருந்து தனது தாய் வீட்டிற்கு மாலோதி வந்துள்ளார். அப்போதுதான் ஏப்ரல் 19-ம் தேதி அன்று தேலு அந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் மாலோதிக்கு தெரியவரவே, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தனது கணவர் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ஹனி டிராப் வலை.. . பாக் ஏஜென்டுக்கு வீடியோ காலில் ரகசிய தகவல் - டிஆர்டிஓ விஞ்ஞானி கைது
அப்போது மாலோதி மாயமான நிலையில், பெண்ணின் வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் தான், கணவரால் மாலோதி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி உண்மை அம்பலமானது. தொடர்ந்து கணவர் தேலுவை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ராஞ்சியில் இருந்து மோப்ப நாய் படை, தடயவியல் குழு, கைரேகை நிபுணர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Extramarital affair, Husband Wife, Jharkhand